2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நெடுங்கேணியில் பாவனையற்ற பஸ் நிலையம்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஜூலை 17 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வடக்கு – நெடுங்கேணியில், பல மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட பஸ் நிலையம், பாவனையற்றுக் காணப்படுகின்றது.

நெடுங்கேணி நகரத்திலிருந்து தொலைவில், இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளமையால், பொதுமக்கள் அதை நாடாமல் கைவிட்டுள்ளனர். இதனாலேயே, அந்த நிலையம், பாவனையற்றுக் காணப்படுவதாக, பிரதேச மக்களும் பஸ் நிலையக் கடை உரிமையாளர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நெடுங்கேணி நகரிலிருந்து 500 மீற்றர் தொலைவிலேயே இந்த பஸ் நிலையம் அமைந்துள்ளது. இருப்பினும், சந்தை, பொலிஸ் நிலையம், வைத்தியசாலை மற்றும் பாடசாலை என்பன, நகரப் பகுதியிலேயே அமைந்துள்ளன. இதனால், பஸ்களில் பயணிக்கும் மக்கள், பஸ் நிலையத்துக்குச் செல்லாது நெடுங்கேணி நகர்ப் பகுதியிலேயே இறங்கிவிடுகிறார்கள்.

இதேவேளை, வவுனியாவில் இருந்து வரும் பஸ்களோ அல்லது முல்லைத்தீவு மற்றும் வவுனியாவுக்குச் சென்றுவரும் பஸ்களும், இந்தப் பஸ் நிலையத்துக்கு வந்துசெல்வதில்லை. நேரடியாக நகருக்கே சென்றுவிடுகின்றன.

இது தொடர்பாக, வவுனியா வடக்குப் பிரதேச சபைத் தலைவர் இ.தணிகாசலத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த பஸ் நிலையம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது ஆட்சிக்காலத்தில், சரியான திட்டமிடலன்றி அமைக்கப்பட்டதாகவும் அரச, தனியார் பஸ்கள், நிலையத்தினுள் சென்று சற்றுநேரம் தரித்துநின்ற பின்னரே பயணத்தைத் தொடர வேண்டுமென, பிரதேச சபை அமர்வில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் கூறியதோடு, இது தொடர்பாக, கடிதம் மூலம் அவர்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X