2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரம் தடை செய்யப்படும்?

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

 

எதிர்வரும் காலத்தில், யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், பண்டிகைக் காலத்தின்போது நடைபாதை வியாபாரத்தைத் தடை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வணிகர் கழகக் கேட்போர் கூடத்தில், இன்று (03) நடைபெற்ற யாழ்ப்பாண வணிகர் கழகப்பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, யாழ்ப்பாணம் நகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. அதிலும், யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வர்த்தக சங்கத்துக்கும் இடையே காணப்படும் முரண்பாடு நிலைமைகள் தொடர்பில் பேசப்பட்டது.

அத்துடன், நீண்டகாலமாக, யாழ்ப்பாண மாநகர சபைக்குச் சொந்தமான நவீன சந்தை அங்காடியில் உள்ள கடை உரிமையாளர்களின் பெயர் மாற்றம் தொடர்பாக அனைவராலும் பேசப்பட்டு வரும் நிலையிலும், இன்றுவரை அதற்கு ஒரு முடிவு எடுக்கப்படவில்லையென, வணிகர் கழகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .