2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பரீட்சைக் காலங்களில் ’ஒலிப்பெருக்கியை கட்டுப்படுத்தவும்’

Editorial   / 2019 ஜூலை 22 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

 

தற்போது, மாணவர்களுக்கான பரீட்சைக் காலம் தொடங்கியுள்ளதால், வழிபாட்டிடங்களில் ஒலிக்கவிடப்படும் ஒலிபெருக்கிகளின் சத்தங்களைக் கட்டுப்படுத்துமாறும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாதிருக்குமாறும்,  வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில், குறித்த ஒன்றியத்தின் செயலாளர் மயூரசர்மா, இன்று (22) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ள அவர், “வடக்கில் பெரும்பாலான கோவில்களில் தற்போது மஹோற்சவப் பெருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், மாணவர்கள் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கின்ற காலப்பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இந்தப் பரீட்சை காலப்பகுதியில், ஒலிபெருக்கிச் சாதனங்களின் சத்தத்தை முடிந்தவரை குறைத்து, மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செயற்படுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .