2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதேச செயலாளர் விவகாரம்: தீர்வு பெற்றுத்தருவதாக உறுதி

Niroshini   / 2021 ஜனவரி 27 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலணை பிரதேச செயலாளரின் இடமாற்றம் குறித்து உரிய கவனம் செலுத்தி அதற்கான தீர்வை பெற்றுத்தருவதக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி, பிரதேசத்தின் பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கையளித்தள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் வைத்தே, இன்று (27) இந்த மனு கையளிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் அப்பிரதேசத்தின் நலன்கருதியும் குறித்த இடமாற்றம் தொடர்பில் தாம் உரிய கவனம் செலுத்தி அதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

வேலணை பிரதேசத்தின் செயலாளராக பதவிவகித்த சோதிநாதன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டு வவுனியா - செட்டிக்குளம் பிரதேச செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள் நிலையில், குறித்த பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து தொடர்ச்சியாக  வேலணை பிரதேசத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இன்று (27) அமைச்சரின் கவனத்துக்கு இவ்விடயம் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .