2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிலவுக்குடியிருப்பு வீட்டுத்திட்ட பிரச்சினைக்கு தீர்வு

Editorial   / 2017 நவம்பர் 20 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஷ்ணகுமார், சண்முகம் தவசீலன்

பிலவுக்குடியிருப்பு மக்களின் வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் தீர்வு காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கேப்பாபிலவு - பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள், இராணுவத்தின் பிடியில் இருந்து மக்களின் நீண்ட போராட்டத்தின் பின் மீட்டெடுக்கப்பட்டது. இருந்தபோதிலும், அக்காணிகளில் எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அம்மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் முயற்சியின் ஊடாக, 41 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, பிலவுக்குடியிருப்பு மக்களுடன் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில், வீடமைப்பு அதிகார சபையின் மாவட்டப் பணிப்பாளர் கமகே, வீடமைப்பு அதிகார சபையின் பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஷர்மிலன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் அடிப்படையில், 41 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டு, நாளை (22) காலை 10.30 மணிக்கு இந்த வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .