2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘புங்குடுதீவில் காணி சுவீகரிப்பு’

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவில், கடற்படை கட்டளை முகாம் நிர்மாணிப்பதற்கு, அப்பகுதியில் உள்ள 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளனவென, வேலணை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்தரைத்த அவர், புங்குடுதீவு கிழக்கில் உள்ள 9ஆம் வட்டாரம், வல்லன், மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே, இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளனவெனவும் கூறினார்.

கடந்த மூன்று வருடங்களாக, மண்கும்பானிலுள்ள தீவகத்தின் பிரதான கடற்படை முகாம் தளபதியும் புங்குடுதீவு வல்லன் கடற்படை முகாமின் பொறுப்பாளர்களாக கடமையாற்றியவர்களும் இணைந்து, மலையடி நாச்சிமார் கோயிலையும், அதற்கருகில் இருக்கும் காணிகளையும் ஆக்கிரமிப்பதற்கு முயற்சித்து வந்தனரெனவும், பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டடு ஒரு வாரங்களுக்குள் (நவம்பர் 22ஆம் திகதி ) வேலணை பிரதேச செயலகத்தினர் ஊடாக, குறித்த காணிகள் கடற்படை கட்டளை முகாம் நிர்மாணிப்பதற்கு சுவீகரிக்கப்பட்டுள்ளதாக, ​ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

எனவே, பாதிக்கப்பட்டோர், 14 நாள்களுக்குள் தங்களது ஆட்சேபனைகளை அறியத்தருமாறும், பிரதேச செயலாளரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .