2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’புதிய வரைவு இதுவரை அனுப்பப்படவில்லை’

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து நேற்றுக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல், யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர், “வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தங்களுக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். வவுனியாவிலும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் தனியார் போக்குவரத்துச் சபைக்கும் இடையில் பல பிரச்சினைகள் உள்ளன. அது தொடர்பாக என்னிடம் சில எண்ணங்கள் உள்ளன. ஆனால் இன்று இலங்கை போக்குவரத்துச் சபையினர் வருகை தராதால் அது பற்றிக் கதைக்க முடியவில்லை: எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், “நாங்கள் முன்னர் அனுப்பப்பட்ட 20ஆவது அரசியல் சீர்திருத்த ஆவணத்தை வைத்துத்தான் எங்களுடைய தீர்மானத்தை எடுத்தோம். அந்தத் தீர்மானம் எடுக்கும்போதே கூறியிருந்தோம், திருந்தங்கள் கொண்டுவரப்பட்டால் பரிசீலிக்கப்பட்டு ஒரு முடிவுக்கு வருவோம் என்று. ஆனால், இதுவரை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அனுப்பப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் திருத்தங்கள் தொடர்பாக ஏதோவொரு விதத்தில் சொல்லப்பட்டதால் தாங்கள் வாங்களித்தோம் என்று கூறுகிறார்கள். அது பற்றி எனக்குத் தெரியாது ஊடகங்களில்தான் அதைப் பார்த்தேன்” எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .