2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புனரமைத்த வீதியின் நிலையைப் பாருங்கள்

Editorial   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன் 

முல்லைத்தீவு - கொக்காவில் பிரதான வீதி, பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டபோதும், நான்கு வருடங்களுக்குள் சேதமடைந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

முல்லைத்தீவு-கொக்காவில் சந்தியிலிருந்து புத்துவெட்டுவான் ஐயன்கன்குளம், பழையமுறிகண்டி ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியின் பத்து கிலோமீற்றர் பகுதியானது, பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது. 

புனரமைக்கப்பட்டு நான்கு வருடங்களுக்குள், குறித்த வீதியானது மிக மோசமாகச் சேதமடைந்து பாரிய குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றது. 

தற்போது, மழை வெள்ளநீர் தேங்கிக் காணப்படுவதுடன், வீதியால் பயணிக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது. 

சுமார் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துகின்ற இவ்வீதியானது, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இன்று வரைக்கும் எந்தவிதமான போக்குவரத்தும் அற்ற நிலையில் காணப்படுகின்றது. 

இப்பகுதியில் இருந்து மணல், கிரவல் போன்றவற்றை கனரக வாகனங்களில் கொண்டு செல்வதனாலேயே, இவ்வீதியானது இவ்வாறு சேதமடைந்திருக்கின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இருக்கின்ற வளங்கள் அழிக்கப்படுகின்றனவே தவிர, தங்களின் அடிப்படைத் தேவைகளையோ அல்லது எந்த அபிவிருத்திகளையோ மேற்கொள்ளவில்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .