2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கில் அனந்திகா முதலிடம்

Editorial   / 2017 ஒக்டோபர் 05 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- எஸ். நிதர்ஷன், க. அகரன், எஸ். றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள், நேற்றிரவு வெளியான நிலையில், யாழ். புனித ஜோன் பொஸ்கோ மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளைப் பெற்று வட மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்துக்கு 155, கிளிநொச்சிக்கு 154, முல்லைத்தீவுக்கு 154, வவுனியாவுக்கு 154, மன்னாருக்கு 153 ஆக வெட்டுப் புள்ளிகள் காணப்பட்டிருந்தன.

மாவட்ட மட்டத்தில், முன்னிலை இடங்களைப் பெற்றவர்கள் பின்வருமாறு,

யாழ்ப்பாணம்

யாழில், பொஸ்கோ மாணவி அனந்திகா முதலிடத்தைப் பெற்ற நிலையில், இரண்டாமிடத்தையும் அதே பாடசாலையைச் சேர்ந்த மைத்திரேயி அனிருத்தன் பெற்றார்.

கிளிநொச்சி

கிளிநொச்சியில், கிளிநொச்சி இந்து ஆரம்பப் பாடசாலையையின் மாணவனான பாஸ்கரன் பார்த்தீபன் 188 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார். இரண்டாமிடத்தை, 185 புள்ளிகளைப் பெற்ற கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வினோதரன் தணிகைக்குமரன் பெற்றார். மூன்றாமிடத்தை, 183 புள்ளிகளாஇப் பெற்ற கிளிநொச்சி இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த கையிலநாதன் சுவேதனா பெற்றார்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவில், 188 புள்ளிகளைப் பெற்ற, புதுக்குடியிருப்பு ஶ்ரீ சுப்ரமணிய வித்தியாசாலை மாணவி மகேந்திரன் ஹர்ஷனா முதலிடத்தைப் பெற்றார். இரண்டாமிடத்தை, 187 புள்ளிகளைப் பெற்ற விசுவமடு விஸ்வநாதர் ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த விஜயரூபன் அன்பருவி பெற்றார். மூன்றாமிடத்தை, 186 புள்ளிகளைப் பெற்ற, நெத்தலியாறு தமிழ் வித்தியாலய மாணவி ஜெகதீபன் நிலவரசி பெற்றார்.

வவுனியா

வவுனியாவில், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த, உதயரசா அவிர்சாஜினி, ஜெயக்குமார் லெவீந் ஆகிய இருவரும் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றனர். மூன்றாமிடத்தை, 186 புள்ளிகளைப் பெற்ற புதுக்குளம் கனிஷ்ட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வி. ரிசாந்த் பெற்றார்.   

மன்னார்

மன்னாரில், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த குபேரகுமார் நயோலன் அபிசேக், 191 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார். இரண்டாமிடத்தை, 187 புள்ளிகளைப் பெற்ற, மன்னார் கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மாணவன் ஜீ. நில்கதன் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X