2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 16 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் விளக்கமறியலை, எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி வரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன் இன்று (16) உத்தரவிட்டார்.

புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார்.

வீட்டு உரிமையாளரின் முறைப்பாட்டுக்கமைய, நீதிமன்ற கட்டளையின் அடிப்படையில், கடந்த டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி, குறித்த நபரை வீட்டிலிருந்து வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளருடன் யாழ்ப்பாணம் பொலிஸார் வீட்டுக்குச் சென்றனர்.

பொலிஸார் அங்குள்ள பொருட்களை வெளியேற்றியபோது, அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் பயன்படுத்தத்தக்க ஏ-கே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் என்பன மீட்கப்பட்டன.

அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்றுவரை (16) விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (16) முற்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .