2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெண் சட்டத்தரணியிடம் அநாகரிகமாகச் செயற்பட்ட இராணுவத்தினர்

Editorial   / 2020 மே 22 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியொன்றில், நேற்று முன்தினம் (20) பெண் சட்டத்தரணி ஒருவருடன், இராணுவத்தினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனிஷ்ட சட்டத்தரணி ஒருவர், தனது சிரேஷ்ட சட்டத்தரணியின் அலுவலகத்தில் கடமைகளை முடித்துக்கொண்டு, இரவு 7 மணியளவில் வீடு திரும்பிய போது, வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர், பெண் சட்டத்தரணியை மறித்து சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது, அந்தப் பெண் சட்டத்தரணி, தான் சட்டத்தரணி என, தனது அடையாள அட்டையை இராணுவத்தினரிடம் காண்பித்துள்ளார்.

அவ்வேளை அவருடைய கைப்பையை தாம் சோதிக்க வேண்டும் என வேண்டிய இராணுவத்தினர், கைப்பையினுள் இருந்த பொருள்களை வீதிகளில் கொட்டி, கைப்பையைச் சோதனையிட்டப் பின்னர் வீதியில் கொட்டப்பட்ட பொருள்களைப் பொறுக்கி எடுத்து செல்லுமாறு இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

அதற்கு சம்மதிக்காத சட்டத்தரணி, பொருள்களை வீதியில் கைவிட்டுவிட்டு தனது கைப்பையை இராணுவத்தினரிடமிருந்து வாங்கி சென்றுள்ளனர்.

இராணுவத்தினரின் இந்த அநாகரிக செயற்பாடு தொர்பில், நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆலோசித்து வருவதாக, அறியமுடிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .