2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். தொண்டைமானாறு அக்கரைக் கடற்கரைப் பகுதியிலுள்ள சுற்றுலா மையத்தை அகற்றுமாறு கோரி, பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.

இச்சம்பவத்தை தனது திறன்பேசியில் புகைப்படம் எடுத்த இளைஞன், அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடையை பொலிஸார் அகற்றியபோதே முறுகல் நிலை தோன்றியுள்ளது.

வலி. கிழக்கு பிரதேச சபையால் அமைக்கப்பட்ட அக்கரை சுற்றுலாக் கடற்கரையில் தொடர்ந்து கலாசார சீரழிவுகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்து, சுற்றுலா மையத்தை அகற்றுமாறு கோரி பொதுமக்கள் நேற்று (14) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது கடற்கரைக்கு செல்லும் வீதியில் வீதித்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அகற்றுமாறு, வலி. கிழக்கு பிரதேச சபை, அச்சுவேலி பொலிஸாரிடம் கோரியதையடுத்து, பொலிஸார் அவ்விடத்துக்குச் சென்று வீதித்தடைகளை அகற்றியுள்ளனர். இதனையடுத்தே பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் தோன்றியுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X