2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொலிஸாருக்கு 10 வாகனங்கள்

Editorial   / 2019 மே 14 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண பொலிஸாருக்கு, அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்கென, 10 வாகனங்களைத் தற்காலிகமாக வழங்குவதற்கு, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ ஆகியோருக்கிடையில், இன்று (14) காலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, பொலிஸாரின் தேவைக்குத் தற்காலிகமாக வாகனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, ஆளுநர் தெரிவித்தார்.

இதற்கமைய, வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டச் செயலகங்களிலும் இரண்டு வாகனங்கள் அவசர நிலைமையில் பொலிஸார் பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்த ஆளுநர், அதற்கு மேலதிகமாக, வடமாகாண சபைக்குச் சொந்தமான 3 வாகனங்களும் பொலிஸாரின் அவசர தேவைகளுக்காகத் தற்காலிகமாக வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு, வடமாகாண மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, பொலிஸார், முப்படையினர் ஆகியோருடன் இணைந்து மேற்கொள்ளக் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .