2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போதைக்கு எதிரான செயற்றிட்டங்கள் ஆரம்பம்

Editorial   / 2018 ஜூலை 15 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், நடராசா கிருஸ்ணகுமார்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுச் செயற்றிடங்கள், அச்சுவேலியில், பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில், இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டன.  

கடந்த பிரதேச சபைக் கூட்டத்தில், வலிகாமம் கிழக்கு பகுதியில், போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது. இதனடிப்படையில், இதன் முதல் கட்டமாக, அச்சுவேலியை மையப்படுத்தி இச்செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்து, காலப்போக்கில் ஏனைய கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.  

இதற்கமைய, இன்று (15) காலை அச்சுவேலி பஸ் நிலையத்துக்கு முன்பாக, போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.  

இதன்போது, அச்சுவேலி நகரில், போதைப்பொருளுக்கெதிரான விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிபெருக்கி ஊடாக அறிவிப்புச் செய்தவாறு நகர் வலம் முன்னெடுக்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வுப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.  

இதில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

இதன்போது, பேரணியாகச் சென்றவர்கள் பொது இடங்கள், தனியார்க் கல்வி நிலையங்கள், சந்தை என மக்கள் கூடும் இடங்கள் தோறும், சிறு சிறு பிரசாரக் கூட்டங்களை நடத்தியதுடன், துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .