2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘போதைப்பொருள் கடத்தலை இராணுவமே மேற்கொள்கிறது’

Editorial   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் 

“இராணுவத்தினருடைய பஸ்களில்தான் அதிகளவிலான போதைப்பொருட்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. அவ்விடயம் குறித்து பொலிஸாரும் அறிவர்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.  

யாழ்ப்பாணத்தில், நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு நாளில் மாத்திரம் 1,000 பயணிகள், பஸ்கள் ஊடாக கொழும்புக்குச் செல்கின்றனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் - கொழும்புச் சேவையில் ஈடுபடும் பஸ்கள் மீது, கடந்த இரு வாரங்களாக பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கை காரணமாக, பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

“வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் போதைப் பொருட்களைக் கடத்திச் செல்லும் பஸ்கள் தொடர்பில், சட்ட ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபருக்கு நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ள போதும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க மறுக்கும் பொலிஸார், வேண்டுமென்றே மக்களுக்கு சௌகரியங்களைக் கொடுக்கும் வகையில், சோதனை நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றனர்.  

“இதுதவிர, பயணிகள் காப்புறுதியுடன் இராணுவத்தினரும் பஸ் சேவைகளில் ஈடுபடுகின்றார்கள். இராணுவத்தினருடைய பஸ்களில்தான் அதிகளவிலான போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. அது பொலிஸாருக்கும் தெரியும். ஆனால் இராணுவத்தினருடைய பஸ்ஸை பொலிஸார் மறிப்பதும் இல்லை, சோதனை செய்வதும் இல்லை” எனத் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .