2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மக்கள் துயர்நீக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் நிர்வாகம்

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

நாட்டில் ஊரடங்கு வேளை உணவு இல்லாமல் தவித்துவரும் மக்களுக்கு அரச நிர்வாகத்தின் புள்ளிவிவரத்தின் கீழ் உணவுப்பொதிகளை வழங்கும் நடவடிக்கையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கொவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக, நிர்வாகத்தின் தலைவர் மு.குகதாசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “30 ஆண்டுகளுக்கு மேலாக யுத்தம்  காரணமாக கோவில் முற்றாக சேதமடைந்துள்ளதும் கொவில் சொத்துளும் அழிக்கப்பட்டன. இன்று கோவில் அடியார்களின் நிதியை கொண்டு புனர்நிர்மானம் செய்யப்படுகின்ற நிலையில் நாங்கள் தேவையான சமூக சேவைகளையும் செய்கின்றோம் என்பதை இந்த இடத்தில் குறித்துக்கொள்கின்றோம்” என்றார்.

மேலும், “முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களின் விவரபட்டியலை அந்தந்த பிரதேச செயலாளர்கள் மூலம் பெற்று, அந்தந்த குடும்பங்களுக்கு உணவுப்பொதி வழங்குகின்றோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .