2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’மக்கள் பாதுகாப்புக்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது’

Editorial   / 2020 மார்ச் 31 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டமானது, மக்களின் பாதுகாப்புக்கவே பிறப்பிக்கப்பட்டுள்ளதென்று தெரிவித்த யாழ்ப்பாண மாவட்டப் பாதுகாப்புப் படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, அதனால் பாதுகாப்பு பிரிவினருக்கு மக்கள் தங்களது ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், யாழ். குடா நாட்டுக்குள் உட்புகுதல் மற்றும் வெளிச்செல்வதற்கான வீதிகள் இரண்டு உள்ளனவெனவும் அந்த இரண்டு வீதிகளிலுமான போக்குவரத்துகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் உங்களிடமிருந்து கிடைக்கும் பொருட்டு, கொடிய தொற்றான கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் கூறினார்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் இதுவரை ஒரு நோயாளி மாத்திரம் அடையாளங்காணப்பட்டுள்ளாரெனத் தெரிவித்த அவர், அந்த நபருக்கு வெளிநாட்டவர் மூலமாகவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்களும் அரச பாதுகாப்புப் பிரிவு சுகாதாரப் பிரிவினரும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆற்றிய பரிகாரத்தின் பலனாகவே, யாழில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதாகவும், ருவன் வணிகசூரிய கூறினார்.

ஊரடங்குச் சட்ட நேரங்களில், அத்தியவசியமான சேவையை மேற்கொள்வதற்கும் அத்தியாவசிய உணவு, பானங்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து, விவசாய வேலைகளை மேற்கொள்ளவும் சிறு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X