2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘மனோவின் கருத்து அடிமை விசுவாசத்தையே வெளிப்படுத்துகின்றது’

Editorial   / 2018 மே 10 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் தலையீடு அவசியமற்றது என அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளமையானது, சிங்கள பௌத்த அரசாங்கத்தில் அவர் கொண்டுள்ள அடிமை விசுவாசத்தையே வெளிப்படுத்துகின்றது” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (10) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் வினாவியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமெரிக்காவின் பல இரகசிய அறிக்கைகள் உட்பட பல தகவல்களை விக்கிலீஸ் வெளியிட்டிருந்த நிலையில், அதில் இலங்கைக்கான முன்னால் அமெரிக்க தூதுவர் இலங்கை தொடர்பாக அனுப்பிய அறிக்கையில், அமைச்சர் மனோகணேசன் போர்க்குற்ற விசாரணை அவசியமில்லை என கூறியிருந்தமையை குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போதும் அவர் தாம் அங்கம் வகிக்க கூடிய பௌத்த சிங்கள அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக அவர் கூறிய கருத்தானது வேதனையளிப்பதுடன் சிங்கள பௌத்த அரசாங்கத்தின் மீதான அவரது அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X