2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மயானங்களை அகற்றக் கோரி கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


“வடக்கு மாகாண சபையே, மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்று. மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து, கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து” என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த 12.07.2017 புதன்கிழமை தொடக்கம் தொடர்ந்து 65 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை, மேற்கொண்டு வருகின்ற புத்தூர் மேற்கு, கலைமதி கிராம மக்களுக்குத் தீர்வை வழங்கக் கோரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று, நாளை காலை 10 மணியளவில், யாழ்ப்பாண கச்சேரிக்கு முன்பாக, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மயானங்களால் பல்வேறு சுற்றுச் சூழல், சுகாதார மற்றும் உளவியற் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் ஏனைய அமைப்புக்களுடனும் இணைந்து முன்னெடுக்கவுள்ள இக்கவனயீர்ப்புக்கு ஆதரவு வழங்குமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தொழிற் சங்கங்கள், வர்த்தகர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரைக் கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .