2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மயானப் பிரச்சினையில் தலையீடு இல்லை’

எம். றொசாந்த்   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புத்தூர் மயானப் பிரச்சினையில் தலையீடு செய்வதில்லை” என வட மாகாண சபை முறைப்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (10) இடம்பெற்றது. இதன்போதே அவைத்தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, புத்தூர் கலைமதி கிந்துசிட்டி மயானத்தில் உடல்களை எரிப்பதற்கு, மயானத்தைச் சூழ உள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் புத்தூர் கலைமதி மண்டப முன்றலில், தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் குறித்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாகாண சபை குறித்த விடயத்தில் தலையீடு செய்து உரிய தீர்வை பெற்றுத்தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையிலேயே, மாகாண சபையின் முறைப்பாட்டுக்குழு, இவ்வாறு தீர்மானித்துள்ளது. சட்டரீதியான நடவடிக்கைகள் புத்தூர் கிந்துசிட்டி மயானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அப்பிரச்சினையில் தலையீடு செய்வதில்லை என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவைத்தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

“தற்போது குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள மயானங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. சூழலுக்கு தீங்கற்ற வகையில் அவற்றை பாவனை செய்யவே நடவடிக்கை எடுக்க முடியும். குடியிருப்புக்களுக்கு மத்தியில் மயானங்கள் அமைக்கப்படவில்லை. மயானங்களுக்கு அருகில் குடியிருப்புக்கள் தான் வந்தன. இனிவரும் காலங்களில் மயானங்களுக்கு 200 மீற்றர் தொலைவிலேயே கட்டடம் அமைக்க உள்ளூராட்சி அமைச்சு அனுமதிக்க வேண்டும். உள்ளூராட்சி அமைச்சு முதலமைச்சரிடம் உள்ளமையால் இது தொடர்பில் முதலமைச்சர் கவனத்தில் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .