2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்களுக்கு அரச படைகள் ஆதரவு’

எம். றொசாந்த்   / 2018 மே 31 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மருதங்கேணியில் வாடி அமைத்து வரும் தென்னிலங்கை மீனவர்களுக்கு அரச படைகள் ஆதரவு தெரிவித்து பாதுகாப்பும் அளித்து வருகின்றன” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்று (31) கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.

அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மருதங்கேணியில் வாடி அமைத்து மீன்பிடியில் ஈடுபட்டு உள்ள மீனவர்களுக்கு எதிராக போராட்டம் நடாத்திய உள்ளுர் மீனவர்களை அரச படைகள் மற்றும் அதன் புலனாய்வு பிரிவினர்கள் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

வெளி மாவட்ட மீனவர்கள் அடாத்தாக மருதங்கேணி பகுதிகளில் வாடி அமைத்து வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிடின் உள்ளுர் மீனவர்களுக்கும் வெளிமாவட்ட மீனவர்களுக்கும் முரண்பாடுகள் இடம்பெறும். அது முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இங்கே இன ரீதியாக பேசப்படவில்லை. யாழ்.மாவட்ட மீனவர்கள் மன்னார் மாவட்டத்துக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட முடியாது. அதே போலவே வெளிமாவட்டங்களில் உள்ள மீனவர்கள் வேறு மாவட்டங்களுக்குள் அத்துமீறி நுழைந்து வாடிகள் அமைத்து மீன்பிடியில் ஈடுபட முடியாது.

எனவே இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய கடற்தொழில் அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .