2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மருந்துகளை வீட்டிலேயே சென்று வழங்கத் திட்டம்’

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

கொரோனாத் தொற்றால், கிளினிக் மருத்துவ சேவைக்கென வைத்தியசாலைக்கு வருபவர்களைக் குறைப்பதற்காக நோயாளர்களுடைய மருந்துகளை வைத்தியசாலை பணியாளர்களின் ஊடாக, நோயாளர்களின் வீட்டிலேயே சென்று வழங்கத் திட்டமிட்டிருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டச் செலகத்தில், நேற்று (18) நடைபெற்ற கொரோனாத் தொற்றை தடுப்பது தொடர்பான கூட்டத்தில், கிளினிக் நோயாளர்கள் தொடர்பில் துணுக்காய் பிரதேசசபைத் தவிசாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும்போதே, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் ஒரு சிலர் கிளினிக் மருத்துவச் சேவைகளைப் பெறுவதற்காக வருகின்றனரெனவும் அதில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்களாக காணப்படுகின்றனரெனவும் கூறினார்.

கொரோனா காரணமாக, அந்தந்தப் பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றவர்களினூடாக, நோயாளர்களுடைய வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்திருப்பதாகவும், அவர் கூறினார்.

“நோயாளர்களுடைய வீடுகள் மிகவும் தூரமாக இருப்பின் அல்லது அவர்களுடைய முகவரியை கண்டுபிடிக்க முடியாத சூழலில் காணப்பட்டால், நோயாளர்களினுடைய உறவினர்கள், கிளினிக் மருத்துவ சேவைகளைப் பெறுகின்ற நோயாளர்களின் பதிவேட்டை வைத்தியசாலையில் வழங்கி நோயாளர்களுக்குரிய மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதுவே, எமது திட்டமாக இருக்கின்றது, அதை நாம் இனி வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தவுள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .