2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாணவர்களை சேர்ப்பதற்கு பணம் அறவீடு

செல்வநாயகம் கபிலன்   / 2018 ஜனவரி 02 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுவேலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், தரம் 6க்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக, 3 ஆயிரம் ரூபாய் பணம் அறவிடப்படுவதாக, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

கட்டடப் பணி ஒன்றுக்காக எனக் கூறியே, ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்து, 3,000 ரூபாய் பணம் அறவீடு செய்யப்படுகிறது. பாடசாலை நிர்வாகத்தின் இச்செயற்பாடு காரணமாக, மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் பெற்றோர், பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
 

குறிப்பாக, அச்சுவேலி நகரப்பகுதியில் இருந்து புறநகர் பாடசாலைகளில் கல்விக் கற்ற மாணவர்கள், தரம் 6க்காக அச்சுவேலி பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இணைப்பது வழமை.

கடந்த காலங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு இல்லாத நடைமுறை தற்போது பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலையில் கட்டுமாணப் பணிக்கு, மாகாண கல்வி அமைச்சு நிதி வழங்கி, கட்டடப்பணி இடம்பெற்று வருகின்ற நிலைமையில், கட்டுமாண நிதிக்கென கூறி மாணவர்களை இணைப்பதற்கு பணம் அறவிடும் நடவடிக்கையை, அடிமட்டக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் பெற்றோர், பணத்தைப் புரட்டுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பில் கல்வி அதிகாரி சற்குணராஜாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

“மாணவர்களை பாடசாலையில் இணைப்பதற்கு பணம் வாங்குவது சட்டரீதியான குற்றமாகும். பாடசாலையில் மாணவர்களை இணைப்பதற்கும் கட்டுமாணப் பணி என கூறி பணம் வசூழிப்பதற்கு பாடசாலை நிர்வாகத்துக்கு அனுமதியில்லை. இது தொடர்பில் பெற்றோர்கள் முறைப்பாடு பதிவு செய்யும் பட்சத்தில் சட்ட நடிவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .