2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாவீரர் வாரம்; வடக்கெங்கிலும் அனுஷ்டிப்பு

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், எம்.றொசாந்த்

மாவீரர் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு, வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று (21) இடம்பெற்றது. இதன்போது, மாவீரர்களின் பெற்றோர், உறவுகளால் சுடரேற்றி மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது  

இதேவேளை, யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவிடத்தில், நேற்று (21) தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், வல்வெட்டித்துறை - கம்பர் மலையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் முதல் மாவீரரான லெப். சங்கரின் நினைவுத்தூபியிலும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.  

அத்துடன், மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிக்கும் நோக்கில், முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.  

நேற்று (21) மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை, இந்தச் சிரமதானப்பணி நடைபெற்றது. 

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில், இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில் இந்த துயிலுமில்லத்தின் ஒரு சிறு பகுதி, இராணுவ நிலைகள் அற்ற பகுதியாக காணப்படுகிறது. இந்தப் பகுதியில், மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்காக, மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் இணைந்து, துப்புரவுப் பணிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .