2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘மீண்டும் கொரோனா ஏற்படா வண்ணம் கடமையில் ஈடுபடுங்கள்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

தேர்தல் விதிமுறை மீறல்களைத் தடுப்பதோடு, யாழில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படா வண்ணம்  தேர்தல் கடமையில் ஈடுபடுமாறு,  யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்தார்.

தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள  பொலிஸாருக்கான தேர்தல் கடமை தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம், யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில், நேற்று  (02) நடைபெற்றது. அதில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இம்முறை தேர்தலில், இரண்டு விடயங்களை தாங்கள் கருத்திலெடுக்க வேண்டுமெனவும் அதாவது வாக்களிப்பு நிலையங்களில், தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் தொடர்பிலும் அதேபோல் மீண்டும் கொரோனா  தொற்று ஏற்படாத வண்ணம் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தம்மிடமுள்ளதென்றார். 

வாக்களிப்பு நிலையங்களில் கடமையில் உள்ள பொலிஸார், மூன்று விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்த அவர், அதாவது, வாக்காளர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து வர வேண்டுமெனவும்   கைகள் கழுவி வாக்களிப்பு நிலையத்துக்குள் செல்ல வேண்டுமெனவும் அத்துடன், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமெனவும் கூறினார்.

எனவே, இம்முறை தேர்தலில், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டுமெனவும், பொலிஸாரை  பிரசாத் பெர்ணான்டோ அறிவுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .