2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முகக்கவசத்தைத் தேடி திரியும் மக்கள்

Editorial   / 2020 மார்ச் 19 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கொரோனா வைரஸ் பரவி வருவதால், பொதுமக்கள் முகக்கவசத்தை வாங்குவதற்கு தேடித் திரிவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவருடன், நேரடியாக 3 அடிக்குட்பட்ட தூரத்தில் ஏதாவது நடவடிக்கை மேற்கொள்பவர்கள் முகக்கவசம் அணிவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளி இருமும்போது, தும்மும் போது இந் நோய்க் கிருமிகள் வெளியேறுவதால், கொரோனா நோயாளி முகக்கவசம் அணிவது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, கொரோனா நோயாளியை அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவரைப் பராமரிக்கும் வைத்தியர், தாதிமார், சுகாதார சேவை சம்பந்தப்பட்டவர்கள் முகக்கவசம் அணிதல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நோயாளியின் உமிழ்நீர் துகள்கள் மூலமாக கொரோனா பரவும். உமிழ்நீர் துகள்கள் பெரும்பாலும் நீண்டதூரம் பயணிக்காது. எனவே, நோயாளியிடமிருந்து 4 அடிக்கு அப்பால் இருப்பவர்கள் முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் கிடையாது.

அத்துடன், முகக்கவசம் அணிவோரும், அணியத் தேவை இல்லாதோரும் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல் அத்தியாவசியமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X