2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முதல் அமர்வில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Niroshini   / 2021 ஜனவரி 13 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள், யாழ். மாநகர சபையில் சிறைவேற்றப்பட்டன.

யாழ்.மாநகர சபையின், 2021ஆம் ஆண்டுக்கான முதல் அமர்வு, இன்று (13) மேயர்; சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, ஜனவரி 8ஆம் திகதியன்று, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து, மூன்று கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதாவது, நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து, சபை அமர்வை ஐந்து நிமிடங்கள் ஒத்திவைத்தல், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் உள்நுழைந்தமையை கண்டித்தல், மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபியை அமைத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து கருத்துரைத்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, அனைவரையும் நினைவுகூரும் வகையில் பொதுவான  நினைவு தூபியொன்று அமைக்கப்பட வேண்டுமென்பதே, தமது கட்சியின் நிலைப்பாடென்றார்.

அந்தவகையில், யாழ் பல்கலைக்களக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீPதி கேட்டு போராடிய விமலேந்திரன்  உள்ளிட்ட மாணவர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டுமென்றும், அவர் கூறினார்.

தொடர்ந்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் தமது கருத்துகளைத் தெரிவித்ததை அடுத்து, சபை அமர்வு 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் அமர்வு ஆரம்பிக்கப்பட்டு. சபையின் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X