2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மே 18 துக்க நாளாக அனுஸ்டிக்கவும்’

Editorial   / 2018 மே 10 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“இலங்கையில் இடம்பெற்ற மிகப் பெரும் தமிழின படுகொலை நாளான மே மாதம் 18 ஆம் திகதியை தேசிய துக்க நாளாக வடக்கு மாகாண சபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், அந்நாளை அனைத்து மக்களும் அமைதியாக உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும்” என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்; ஊடக அமையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மே மாதம் 18 ஆம் திகதியை வடக்கு மாகாண சபை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. எனவே அன்றைய நாளில் அனைத்து தமிழ் மக்களும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும்.

இதற்கமைய ஒவ்வொருவரும் அன்றைய நாளில் வியாபார நிலையங்களிலும், வீடுகளிலும் கறுப்பு கொடிகளை பறக்க விட்டும், களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்தும் உணர்வுபூர்வமாகவும் அமைதியாகவும் அனுஸ்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .