2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யானை பிரச்சினைக்கு ஜனாதிபதியால் தீர்வு

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

விசுவமடு பகுதியில், 16 கிலோமீற்றர் தூரத்துக்கு யானைவேலி அமைக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சிக்கு இன்று (18) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியை, வடமாகாண முதலமைச்சர் சந்தித்து, கலந்துரையாடினார்.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் யானை தொல்லையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதை ஆராய்ந்த ஜனாதிபதி, 05 மில்லியன் ரூபாயை உடனடியாக ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தார்.

அத்துடன், விசுவமடு பகுதியில் 16 கிலோமீற்றர் தூரத்துக்கு உடனடியாக யானை வேலி அமைக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு - விசுவமடு பிரதேசத்தில், யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளமை தொடர்பில், அப்பகுதி மக்கள் பல்வேறுபட்ட அரச அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்கள். இருப்பினும், அவ்விகாரத்துக்கு தீர்வுப் பெற்றுக்கொடுப்பதற்கு பாரிய இழுத்தடிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .