2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழில் உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகம்

Editorial   / 2018 ஜனவரி 18 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

‘யாழ்.மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள உருளைக்கிழங்கு பயிர்கள், நோய்த்தாக்கம் எதுவுமின்றி தரமான முறையில் வளர்ச்சிகண்டு வருகிறது. ஆகையால் இம்முறை நல்ல விளைச்சலை எதிர்பார்க்க முடியும்’ என யாழ் மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தி விற்பனை கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தின் தலைவர் இ.தெய்வேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு இந்த வருடம் தலா நான்கு அந்தர் வீதம் 200 கிலோ கிராமுக்கு 50 வீத மானிய விலையில், விதை உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. 50 கிலோ விதை உருளைக்கிழங்கு பொதியின் தரநிர்ணய விலை 13 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 14ஆயிரம் ரூபாய் ஆகும். இருந்தும், 50 வீத மானிய விலையில் 7 ஆயிரம் ரூபாய் மற்றும் 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கு கிழங்கு வழங்கப்பட்டது.

கடந்த காலத்தில் தனியார் விதை உருளைக்கிழங்கு விநியோகித்தலில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகள் விரும்பிய அளவு நடுகை செய்தனர். இந்த வருடம் தனியார் துறையினர் விதை உருளைக்கிழங்கு விநியோகத்தில் ஈடுபாடு கொள்ளவில்லை. இதனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நடுகை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கைகள் நல்ல நிலையில் வளர்ந்து வருகின்றன. பனிப்பொழிவுவோடு குளிரான காலநிலை நிலவுவது உருளைக்கிழங்கு வளர்ச்சிக்கு ஏற்புடையதாகவுள்ளது.

யாழ் மாவட்டத்தில் இருந்து அறுவடை செய்யப்படும் உருளைக்கிழங்கு இந்த மாத இறுதியில் சந்தைக்கு வரவாய்ப்புள்ளது. யாழ்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு தம்புள்ளை மத்திய சந்தை மற்றும் வெளிமாவட்டங்களில் தனித்துவமான வரவேற்;பு உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .