2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழில் திடீரென இராணுவப் பிரசன்னம் அதிகரிப்பு

Editorial   / 2020 மே 22 , மு.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழில், திடீரென இராணுவப் பிரசன்னமும் கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, யாழ். நகர் பகுதி, கலட்டி, நாச்சிமார் கோவிலடி, கொக்குவில், திருநெல்வேலி, பாற்பண்ணை பகுதி உள்ளிட்ட பல இடங்களில், நேற்று முன்தினம் (20) மாலை, இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, வீதியில் செல்வோரிடம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரியவருகிறது.

இதேவேளை, மோட்டார் சைக்கிள்களில் இராணுவத்தினர் குழுக்களாகப் பிரிந்து, சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலத்தின் பின்னர், வீதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பதிவு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டமை, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X