2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழில் நெடுந்தூர பஸ் நிலையம் திறப்பு

Niroshini   / 2021 ஜனவரி 27 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என். ராஜ், டி.விஜித்தா

நகர அபிவிருத்தி கரையோரப் பாதுகாப்பு கழிவுப் பொருள்கள் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவின் பணிப்புரைக்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் - வெளி மாவட்டங்களுக்கு இடையிலான நெடுந்தூர பஸ் நிலையம், இன்று (27) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நெடுந்தூர பஸ் நிலையம், சுமார் 120 மில்லியன் ரூபாய் நிதிஒதுக்கீட்டின் கீழ், நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் திருமதி எச்.எம். சார்ள்ஸ்,  கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற குழுக்களின் பிரதிதவிசாளர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்டச் செயலாளர்  கணபதிப்பிள்ளை மகேசன், யாழ். மாநகர சபை மேயர் வி. மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X