2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

எஸ்.கருணாகரன்   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, காணாமல் போனோர்களின் உறவினர்கள், யாழில் இன்று (10) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக  இன்று காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, கிளிநொச்சி, மருதங்ககேணி பகுதிகளில் உள்ள காணாமல் போனோர்களின் உறவுகள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்த நிலைமையில், வடக்கில் இராணுவத்தில் சரணடைந்தோர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோர்களை கண்டறிந்து தருமாறும் வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.  

யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது பேரணியாக யாழ். சோமசுந்தரம் வீதி வழியாக, நாவலர்  வீதியைச் சென்றடைந்தது. அதன்பின்னர் நாவலர் வீதியில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவுகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X