2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழில் முதன்முறையாக தேசிய தமிழ்த் தின விழா

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

தேசிய தமிழ்த் தின விழா, பாடசாலைகளின் கலாசார விழா என்பன, யாழ். இந்துக் கல்லூரியில், எதிர்வரும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளது.

வட மாகாணத்தில் முதல் தடவையாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சு, ஐங்கரன் மீடியா சொலுஷன் ஆகியன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. முதலாம் நாள் நிகழ்வுகளில், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சுகி சிவத்தின் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

இரண்டாம் நாள் நிகழ்வில், பாடசாலைகளின் கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மேலும், தென்னிந்திய புகழ்பெற்ற “பாரத கலாஞ்சலி” வழங்கும் ‘ஓம் சிவா முருகா’ பரத நாட்டிய நிகழ்வும் நடைபெறவுள்ளது. அத்துடன் வட மாகாணத்தில் திறம்பட செயற்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், கல்விமான்கள், வியாபாரத்துறை சார்ந்தவர்கள், சிறந்த சேவையாற்றிய ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

தொடர்ந்து தென்னிந்திய புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொள்ளும் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது. நிகழ்வுக்கான அனுமதி முற்றிலும் இலவசமாகுமென்றும் பொதுமக்களும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X