2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘யாழ்., கிளியில் கை சின்னத்தில் போட்டியிடுவோம்’

Editorial   / 2017 டிசெம்பர் 09 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில், வேறு பகுதியில் ஒவ்வொரு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ஆனாலும் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து வெற்றிலைச் சின்னம் இல்லாமல் கை சின்னத்தில் போட்டியிடும்” என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாவகச்சேரியில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேற்று (08) காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியிருந்தது.

கட்டுப்பணத்தைச் செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், சாவகச்சேரியில் போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று (நேற்று) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

“இருப்பினும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடவுள்ளது. கிராமங்களை அபிவிருத்தி செய்து புதிய ஒரு யாழ்ப்பாணத்தை உருவாக்கும் தேர்தலாகவே இதனை எமது கட்சி பார்க்கின்றது.

“இருப்பினும், ஒரு சில அரசியல் கட்சியகள் மீண்டும் மீண்டும் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி, உரிமைக்கான தேர்தல் என்று மக்களை ஏமாற்றுகின்றது.

 

“கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வந்தவர்கள் மக்களுக்காக, கிராமங்களுக்கா என்ன செய்தார்கள் என்று எமக்கு தெரியும். எந்த அபிவிருத்தியும் அடையாமல் இன்றும் கிராமங்கள் அப்படியேதான் இருக்கின்றது. இம்முறை மக்கள் தெளிவாக உள்ளார்கள். இதன்படி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு பெருகிக் கொண்டு வருகின்றது.

“இம்முறை மக்கள் கட்சிகளின் சின்னங்களை தேடி வாக்களிக்காமல், நல்ல மனிதர்களைத் தேடி வாக்களித்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக வட மாகாணத்தையும், யாழ். மாவட்டத்தையும், அபிவிருத்தி அடைந்த நிலைமைக்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.

தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பளவு தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி கேட்கப்பட்டது. இது தொடர்பில் பதிலளித்த அங்கஜன் இராமநாதன் கூறியதாவது,

“ஒவ்வொரு தேர்தலிலும் சில கட்சிகள் ஆசனப் பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் தமக்குள் சண்டைப் போட்டுக் கொள்வதும், இறுதியில் ஒன்று சேர்வதும் வழமையாக விடயமாக உள்ளது. இது புதிதல்ல. கடந்த தேர்தலிலும் இவ்வாறுதான் பிரச்சினை இருந்தது. மக்களை ஏமாற்றும் ஒரு வகையான செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டும்.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில், வேறு பகுதியில் ஒவ்வொரு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ஆனாலும் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து வெற்றிலைச் சின்னம் இல்லாமல் கை சின்னத்தில் போட்டியிடும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X