2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட கண்காட்சி

Editorial   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட தனது 40 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து, உள்நாட்டு, வெளிநாட்டு யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து மாபெரும் மருத்துவக் கண்காட்சியை நடாத்தவுள்ளனர்.

இக்கண்காட்சி நாளை மறுநாள் (04) ஆரம்பிக்கப்பட்டு, எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளதாக இன்று (02) யாழ்.மருத்துவ பீட பதில் பீடாதிபதி வைத்தியர் எஸ்.சுரேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இக்கண்காட்சியானது எதிர்வரும் 5ஆம், 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் யாழ் மருத்துவபீட வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இறுதியாக கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த கண்காட்சி 5வருடத்துக்கு ஒரு முறை நடாத்தப்படும் இக்கண்காட்சியின் பிரதான நோக்கமாக மருத்துவபீட மருத்துவத்துறையின் நவீன வளர்ச்சி, சிறந்த நடைமுறைகள் மற்றும் ஆய்வு முடிவுகள் பற்றிய விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்கவும்,

முறையான பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை மேம்படுத்தல் பற்றிய முக்கிய சுகாதார தகவல்களை வழங்கவும்,

பிரதான தொற்றா நோய்களான நீரிழிவுநோய், உயர்குருதியமுக்கம், பாரிசவாதம், இருதய நோய்கள், நாட்பட்ட சுவாசநோய், புற்றுநோய்கள் மற்றும் ஏனைய முக்கிய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை வழங்கவும்,

வடமாகாண மக்களுக்கு இலங்கையில் கிடைக்கக்கூடிய சுகாதார சேவைகள் பற்றி விளக்கவும்,

பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார விஞ்ஞானம் சார்ந்த அறிவையும், ஆற்றலையும் மேம்படுத்தவும்,

இளைஞர்களுக்கு சுகாதார துறைசார் தொழில் வாய்ப்புக்களை தேர்ந்தெடுப்பதுக்கான வழிகாட்டல்களை வழங்கவும் இந்த மருத்துவ கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்;ளது.

உணவுப்போசாக்கின் தரத்தை உயர்த்தல், நோய் நிலைமைகளையும் அவற்றை தடுத்தல் சம்மந்தமான அறிவு மேம்படுத்தப்படல், தொற்றா நோய்களின் அதிகரிப்பு குறைக்கப்படுதல், பாடசாலை மாணவர்களின் உயிரியல் விஞ்ஞானம் தொடர்பான அறிவு மேம்படுத்தப்படல், சுகாதார துறை சார்ந்த அறிவூட்டல் மூலம் சுகாதார துறைக்கு பொருத்தமானவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தல் என்பன இக்கண்காட்சி மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி கண்காட்சியானது அடிப்படை உயிரியல் விஞ்ஞானம், நடைமுறை சவால்கள், நவீன மருத்துவ தொழில்நுட்பம், துறை வழிகாட்டல், குழந்தை, இளமைப்பருவ, வளர்ந்தோர், மற்றும் வயோதிப உடல், உள, ஆரோக்கியமும அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் எனும் பிரதான தலைப்புகளினூடும் அவற்றிக்கூடாக பல உபதலைப்புக்களினுடனும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இத்தோடு மருத்துவம் சார்ந்து நின்றுவிடாது கண்காட்சியை முன்னிட்டு புகைப்படப்போட்டி, பாடசாலை மாணவர்களுக்கான வினாடிவினாப் போட்டியும் அவற்றுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

வயது எல்லைகளின்றி அனைவரும் வருகை தந்து பயன்பெறக்கூடிய வகையில் கண்காட்சியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காட்சிப்படுத்தல்கள், விழிப்புணர்வுகள், விளக்கவுரைகளோடு மட்டும் நின்றுவிடாமல் இலவச அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் அதனூடாக விளக்கங்களும் தேவைப்படின் மேலதிக பரிசோதனைகள் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்களும் இங்கு விளங்கப்படுத்தப்படவுள்ளன.

எனவே மிகுந்த பொருட்செலவுடனும், நேரச்செலவுடனும் சமுதாய நலன்கருதி நடாத்தப்படும் இம்மாபெரும் மருத்துவக்கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X