2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’யாழ். பல்கலைக்கழகத்தின் 89 பேருக்கும் தொற்றில்லை’

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், இதுவரையில் 89 பேருக்கான கொரோனா தொற்று ஆய்வுகூடப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களில் எவருக்கும் தொற்று ஏற்பட்டில்லை என்று உறுதியாகியுள்ளதாக, பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியும் மருத்துவ நிபுணருமான எஸ்.ரவிராஜ் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில், இன்று (09) காலை நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறனார்.

இந்த ஊடகச் சந்திப்பில், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி மருத்துவர் எஸ்.ரவிராஜ், யாழ். பல்கலைககழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.முருகானந்தா, யாழ்.போதனா வைத்தியசாலை துண்ணுயிரியல் வைத்திய நிபுணர் ரஜந்தி இராமச்சந்திரன், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி கே.முருகானந்தன், யாழ். போதனா வைத்தியசாலையின் தலைமை மருத்துவ தொழில்நுட்பவியலாளர் எஸ்.சுரேஸ்குமார், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியர் செ.கண்ணதாசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் டொக்டர் ரவிராஜ் கொரோனா வைரஸ் தொடர்பில் ஒரு நாளில் 20 தொடக்கம் 24 பேருக்கு, ஒரே  தடவையில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அதற்கு மேலதிகமாகப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமாயின், ஒரே நாளில் இரண்டு தடவைகள் பரிசோதனைகளை மேற்கொள்வதால், 45 பேருக்கான சோதனைகளை மேற்கொள்ள முடியுமென்றும் கூறினார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரால் பரிந்துரைக்கப்படும் நபர்களின் இரத்த மாதிரிகள் மாத்திரமே, இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X