Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி.விஜிதா
தைரொட்சைட் நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சைக்குரிய உபகரணங்கள் தேவையாக இருப்பதால், அந்த உபகரணத்தைப் பெற்றுக்கொடுக்க செல்வந்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் முன்வர வேண்டுமென யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட காது, மூக்கு மற்றும் தொண்டை வைத்திய நிபுணர் திருமாறன் கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில், யாழ். போதனா வைத்தியசாலையில் 2 சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை இலங்கையில் 2 ஆவது தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தைரொட்சைட் சுரப்பிக்கான சத்திரசிகிச்சை கழுத்தின் கீழ் சத்திரசிகிச்சை மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, வாய்ப்பகுதியினால் மேற்கொள்ளப்படுகின்றது.
பாங்கொங்கில் பயிற்சி பெற்று, இந்த தைரொட்சைட் சத்திரசிகிச்சையினை வெற்றிகரமான நிறைவு செய்துள்ளோம். கொரிய நாடுகளில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் 3 மணித்தியாலயங்களில் வீட்டுக்கு நோயாளர்கள் அனுப்பப்படுகின்றார்கள். யாழ்.போதனா வைத்தியசாலையில், அம்புலன்ஸ் வசதிகள் போதாமையால், நோயாளர்களை நீண்ட நாட்களுக்கு வைத்தியசாலையில் வைத்து பராமரிக்க வேண்டிய தேவை உள்ளது.
இவ்வாறான முறையில், 4 சென்றி மீற்றர் நீளமுடைய கட்டிகளையே அகற்ற முடியும். மிகப்பெரிய கட்டிகளை இந்த சத்திரசிகிச்சை மூலம் அகற்ற முடியாது.
யாழ்.போதனா வைத்தியசாலையைப் பொறுத்தவரையில் காது, மூக்குத் தொண்டைப் பிரிவு மிகச்சிறப்பாக இயங்கி வருகின்றது.
இந்த சத்திர சிகிச்சைகளின் பின்னர் வவுனியா, மன்னார், திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் தைரொட்சைட் நோயாளர்கள் சத்திரசிகிச்சைக்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இங்கு பல கோடி ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அவற்றினை செல்வந்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தந்து உதவ முன்வர வேண்டும். அவ்வாறு முன்வந்தால், தைரொட்சைட் சத்திரசிகிச்சையினை மிக சிறப்பாக மேற்கொள்ளமுடியும் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
17 Apr 2024