2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ். மேல் நீதிமன்றத்தால் 41 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பளிப்பு

Editorial   / 2018 ஜனவரி 02 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த், டி.விஜிதா

யாழ். மேல் நீதிமன்றத்தில் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மேல் நீதிமன்ற புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் கடமையேற்ற கடந்த மூன்று வருட கால பகுதியில், 31 பேர் மரண தண்டனை குற்றவாளிகளாகக் காணப்பட்டு, நீதிபதியால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்றம், யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பின்னர் இது வரை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 9 நீதிபதிகள் கடமையாற்றியுள்ளனர்.

அந்த வகையில், கடந்த 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை நீதிபதி கே.பி.எஸ்.வரதராஜா, 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரை நீதிபதி எஸ்.தியாகேந்திரன், 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரை நீதிபதி பி.ஸ்வர்ணராஜா, 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை நீதிபதி ஆர்.ரி.விக்னராஜா, 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரை நீதிபதி எஸ். பரமராஜா, 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜெ.விஸ்வானந்தன், 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை நீதிபதி அ.பிறேம்சங்கர், 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2015 மே மாதம் வரை நீதிபதி திருமதி கே.சிவபாதசுந்தரம் ஆகியோர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதிகளாக கடமையாற்றியுள்ளனர்.

அத்துடன், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் இன்று வரை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மா.இளஞ்செழியன் கடமையாற்றி வருகிறார்.

மேற்குறிப்பிட்ட நீதிபதிகளின் சேவைக்காலப்பகுதியிலேயே, மேற்குறித்த 41 பேருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன், கடந்த 2005, 2008, 2010ஆம் ஆண்டுகளில், தலா ஒருவருக்கும் 2012 ஆம் ஆண்டில் 2 பேருக்கும் 2013ஆம் ஆண்டில் ஒருவருக்கும் 2014ஆம் ஆண்டில் 4 பேருக்கும், 2015ஆம் ஆண்டில் 8 பேருக்கும் 2016ஆம் ஆண்டில் 11 பேருக்கும் 2017ஆம் ஆண்டில் 12 பேருக்கும் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றங்கள் ஊடாக வழக்கு விசாரணைகளை இடம்பெற்றன. பின்னர், மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களுக்கே, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X