2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழ்ப்பாண ஓட்டோக்களுக்கு ஜனவரிக்குள் மீற்றர் பொருத்த நடவடிக்கை

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.விஜித்தா

யாழ்ப்பாண மாவட்டத்தில், பயணிகள் சேவையில் ஈடுபடும் ஓட்டோக்கள் அனைத்துக்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள், பயணத் தூரத்துக்கான கட்டணங்களைக் குறித்துக் காட்டும் மீற்றர்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுமென, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கும் பிரதான ஓட்டோச் சங்கங்கள் ஐந்தின் நிர்வாகிகள், மாநகர முதல்வர், பொலிஸார் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று, இன்று (13), யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே, மாவட்டச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், யாழ். மாவட்ட ஓட்டோக்களுக்கு மீற்றர் பொருத்துவதாக, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதனால் பயணிகளுக்கும் ஓட்டோ சாரதிகளுக்கும் இடையில், பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதாகவும் இப்பிரச்சினைக்குத் தீர்வாக, மீற்றர் பொருத்துவது கட்டாயமாக்கப்படுவதாகவும் மூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஓட்டோ உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், மீற்றர்களைப் பொருத்துவதற்கு, ஓட்டோ சாரதிகள் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்றும் உரிய வழிகாட்டல் இருக்குமாயின், குறிப்பிட்ட காலத்துக்குள், அனைத்து ஓட்டோக்களுக்குமாற மீற்றர்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறினர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X