2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

Editorial   / 2019 ஜனவரி 24 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 10ஆவது தடவையாக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை யாழ் மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சியை எதிர்வரும் 25 ஆம் திகதி 9 மணிக்கு யாழ் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆனோல்ட் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு யாழில் நேற்று (23) மாலை நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் துறை மன்றத் தலைவர் கே. விக்கினேஸ் கருத்து வெளியிடுகையில்,

யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வடக்கிற்கான நுழைவாயில் என்ற பெயருடன்  உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்கள் ஒன்று கூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் துறைமன்றம் பல தரப்பினருடன் இணைந்து ஏற்பாடு செய்த இக் கண்காட்சி 10 ஆவது ஆண்டாகவும் இம் முறை நடைபெறவுள்ளது.

கடந்த காலங்களை போல உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக கூடங்கள் அமையப் பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவில் இருந்து வருகின்ற வர்த்தக நிறுவனங்கள் பலவும் இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாக இம் முறை வருகை தரவில்லை. ஆனாலும் இந்தோனேசியாவில் இருந்து பல வர்த்தக நிறுவனங்கள் வருகை தந்து தமது கூடங்களை அமைக்க உள்ளனர்.

இக் கண்காட்சியைப் பார்வையிடுகின்ற பாடசாலை மாணவர்களுக்கு இலவசம் என்பதுடன் ஏனையவர்களுக்கு கட்டணமும் அறிவிடப்பட இருக்கின்றன. மேலும் கடந்த காலங்கள் போன்று பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இம் முறையும் வருவார்களென எதிர்பார்க்கின்றோம்.

இங்கு தொழில் வழிகாட்டல்கள், விசேட உணவு வகைகள் மற்றும் குடிபானங்கள், வீடுகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், கட்டட நிர்மாணப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்கள், அழகு சாதன மற்றும் அழகுக் கலைசேவைகள், சிறுவர்களிற்கான விசேட நிகழ்வுகள், கல்வி ஆலோசனைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் என்பன இக் கண்காட்சியில்  என்பன இக் கண்காட்சியில் பிரதான அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

இக் கண்காட்சியானது பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் உள்ளுர் உற்பத்தியளர்களுக்கும் மிகவும் பயனுடையதாக அமைந்துள்ளது. ஆகவே சரியான முறையில் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .