2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வடக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Gavitha   / 2021 ஜனவரி 12 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

வடக்கு மாகாணத்தில், நேற்று (11) மாத்திரம் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என, யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில், 427 பேருக்கும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 313 பேருக்கும், நேற்று (11) பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனையில், வடக்கில் 31 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் உள்ள பளை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத்தீவில் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஏனைய 27 பேரும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என வைத்தியர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ். மருத்துவபீட ஆய்வுகூட பரிசோதனையில், வவுனியாவைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வவுனியாவில் மாத்திரம் நேற்று 51 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .