2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வடக்கில் மேலுமொரு தொகுதி காணிகள் விடுவிப்பு

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினால் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த காணிகளை கையளிக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இன்று (22) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 40.74 ஏக்கர் அரச காணிகளும் 13.64 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264 ஏக்கர் தனியார் காணிகளும் இராணுவத்தின் கீழ் இருந்த 4 பண்ணைகளுக்கு சொந்தமான 1099 ஏக்கர் அரச காணிகளையும் விடுவிப்பதுக்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (21) இடம்பெற்ற தேசிய போதைத்தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் வைத்து, கையளிக்கப்பட்டதுடன் அந்தக் காணிகள வட மாகாண ஆளுநர் ஊடாக மாவட்ட செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .