2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வலிகாமத்தில் டெங்குத் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு

எம். றொசாந்த்   / 2017 செப்டெம்பர் 26 , மு.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். வலிகாமம் மேற்கு, தென்மேற்கு பிரதேசங்களில், டெங்குத் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த 70 பேர் வரை, கடந்த 25 நாட்களில் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனால் குறித்த பிரதேசங்களில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். குறித்த பிரதேசங்களில், டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகமாகவுள்ள இடங்களில், புகையூட்டல் நடவடிக்கையிலும் குடியிருப்புகளுக்குச் சென்று சோதனை நடவடிக்கையிலும் சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

டெங்கு நுளம்பின் குடம்பிகள் பெருகக் கூடிய வகையில் சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 குடியிருப்பாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வலிகாம் தென் மேற்குப் பிரதேசத்தில் 40 பேரும் வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் 30 பேரும் டெங்கு நோய்த் தொற்றால் பாதிப்புள்ளாகியுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதேவேளை, டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த இருவருக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜூட்சன், தலா 10,000 ரூபாய் தண்டம் விதித்து, நேற்று (25) தீர்ப்பளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .