2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியா சிறைச்சாலையில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

க. அகரன்   / 2018 மே 11 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கைதியொருவர் நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்த நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (11) அவ்விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி சட்டத்தரணி ஆர்.எம்.வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர,; விளக்கமறியல் சிறைச்சாலையில் நிலைமைகளை ஆய்வு செய்து சிறைக் கைதிகளிடம் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அண்மையில் விளக்கமறியல் சிறைக்கைதி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது, விளக்கமறியல் சிறைச்சாலையில் இடம்பெறும் கைதிகளுக்கு எதிரான அநீதிகளை நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தார்.

இதன் பின்னர் நேற்று (10) சட்டத்தரணிகளும் சிறைச்சாலை அநீதிகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இன்று (11) காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதிகளிடம்  விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்துத் தெரிவித்த வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி, “சிறைச்சாலையிலுள்ள கைதிகளிடமும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் சிறைக்காவலர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது.  பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கைகளை கொழும்பு தலைமை அலுவலகத்துக்கு அறிக்கையிடப்படும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .