2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’வாக்களிக்க கூடிய நிலையில் இல்லை’

சண்முகம் தவசீலன்   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஒவ்வொருவரையும் நம்பி வாக்களித்து ஏமாந்துவிட்டோம். இனியும் நாம் வாக்களிக்க கூடிய நிலையில் இல்லை” என,  முல்லைத்தீவில்  280ஆவது நாளாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகள், இன்று (13) தெரிவித்துள்ளனர்

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தாயொருவர்,

“மீள்குடியேற்றம் வந்தவுடன் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்தார். நாங்கள் எங்களுடைய பிள்ளைகள் எங்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையோடும் எங்களுக்கு ஒரு விடுதலை கிடைக்கும் என்ற ஒரு  ஆவலுடனும் வாக்களித்தோம். ஆனால், எங்களுக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை.

“அதனைத் தொடர்ந்து, அதேபோல் எங்களுடைய மைத்திரி ஜனாதிபதியாக வந்தார். அவரையும் நாங்கள் எதிர்பார்த்தோம். அவரும் அதையே செய்தார். திரும்பவும் இப்போது எங்களிடம் வந்து வாக்கு கேட்கின்றனர். ஆனால் நாங்கள் வாக்களிக்க கூடிய நிலையில் இல்லை” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .