2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா, க. அகரன், மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன்,  செ.கீதாஞ்சன்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு, இன்று எடுத்துச் செல்லப்பட்டன.

இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் வாக்கெண்ணும் மத்திய நிலையமான யாழ்.மத்திய கல்லூரியில் இருந்து இன்று காலை 9 மணிமுதல் யாழ். மாவட்டத்தில் உள்ள 526 வாக்குச் சாவடிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

பொலிஸ் உத்தியோகத்தரின் பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

நெடுந்தீவுக்கான வாக்குப்பெட்டிகள், ஹெலிகொப்டர்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

யாழ்.மத்திய கல்லூரி வளாகம் முழுவதும் விசேட அதிரடிப் படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இம்முறை தேர்தல் கடமையில் 7000 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் தேர்தல் கடமையில். அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா மாவட்டச் செயலகத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் 141வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை வவுனியா மாவட்டச் செயலகத்தில் 31 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 61 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் 119,811 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வன்னியில் 287,013 பேர் வாக்களிக்கதகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் இன்று காலை 8 மணிமுதல் வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து  பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன.  

இந்தப் பணிகளின் போது, சுகாதார நடைமுறைகள்  பேணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன், வன்முறைகளை கண்காணிப்பதற்காக வன்னியில் 4,200க்கும் மேற்பட்ட பொலிஸார் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வவுனியாவில் 1,500க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி பழைய மாவட்டச் செயலகத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்கு பெட்டிகள் காலை 8.30 மணிமுதல் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில், 107 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை   14 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  92,264 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். 

இதேவேளை, மாவட்டத்தில்,  1,745 அரச ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று   செவ்

வாய்க்கிழமை காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையான நேரப்பகுதிக்குள் பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .