2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘வாள்வெட்டுச் சம்பவங்கள் கட்டுக்கடங்கின’

Editorial   / 2017 நவம்பர் 21 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

அண்மைக் காலத்தில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின்​ பேரில், இதுவரை 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.  

மேலும், இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்களை, தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார். 

 நேற்று (20), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் கூறியதாவது,

 “கடந்த நாட்களில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், 81பேர் கைது செய்யப்பட்டனர்.  

 “இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். அவர்களில் 75 பேர், நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஏனைய 6 பேரும், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  

 “அதேவேளை, குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும், “வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், பொலிஸார் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்” என, அவர் மேலும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X