2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’வாழ்வாதாரத்தில் கை வைத்தால் எதிர்த்து போராடுவோம்’

Editorial   / 2018 ஜூலை 09 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

தங்கள் வாழ்வாதாரத்தில் கைவைத்தால், அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோமென, முல்லைத்தீவு பொதுச்சந்தை வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில், ​மேலும் கருத்துரைத்த அவர்கள்,

வடக்கில் உள்ள பல்வேறு இடங்கள், தொல்பொருள் திணைக்களத்தால், தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் 16ஆம் பிரிவின் கீழ், புராதனச் சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்கள்,

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி, அன்றைய தேசிய மரபுரிமைகள் அமைச்சராக இருந்த ஜகத்பாலசூரியவின் உத்தரவுக்கமைய, வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான இடங்கள் புராதனச் சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும்

அதில் ஒன்று முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பொதுச்சந்தையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்தப் பொதுச்சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அரசாங்கத்துக்கு வரி செலுத்தி, வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், காலம் காலமாக தாங்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனால், தங்கள் வாழ்வாதாரத்தில் கைவைத்தால் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோமெனவும் தெரிவித்தனர்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், முல்லைத்தீவு மக்களுக்கு இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லையெனக் குறிப்பிட்ட அவர்கள், இது தொடர்பில் மாவட்ட செயலாளருக்கோ அல்லது பிரதேச செயலாளருக்கோ அல்லது தவிசாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு கூட தெரியாது என்ற விடயத்தை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மக்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

எனவே, இதனை ஊடகங்கள் ஊடாக அனைத்து பொதுமக்களும் அறிந்துகொள்ளவேண்டுமென, அவர் மேலும் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் முதல், தொல்பொருள் திணைக்களம் செயற்பட தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .