2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘விசாரணைக்கு புதிய குழு வரும்’

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

வடமாகாண மீன்பிடி மற்றும் சுகாதார அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாராணை செய்வதற்காக புதிய விசாரணை குழு ஒன்றை மிக விரைவில் நியமிக்க உள்ளேன் என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், “புதிய அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் நான் இன்னும் முடிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. தற்போது வடமாகாண சபை உறுப்பினர்களிடம் சுயவிபரக்கோவைகளைக் கோரியுள்ளேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குழப்பங்களின் பின் வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு சுமூகமாக, இன்று (22) இடம்பெற்றது.

தற்போது கல்வி மற்றும் விவசாய அமைச்சுகளுக்கு அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் முதலமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தெடர்ந்து கருத்துத் தெரிவித்த ​அவர்,

“வடமாகாண மீன்பிடி மற்றும் சுகாதார அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாராணை செய்வதற்காக புதிய விசாரணை குழு ஒன்றை மிக விரைவில் நியமிக்க உள்ளேன். குழு நியமிக்கப்பட்டதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.

“புதிய அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் நான் இன்னும் முடிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. தற்போது சபை உறுப்பினர்களிடம் சுயவிபரக்கோவைகளைக் கோரியுள்ளேன். அவற்றில் சில உறுப்பினர்களின் சுயவிபரக்கோவைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

“மேலும், உறுப்பினர்களின் கட்சிகள், உறுப்பினர்களின் தகுதி, அவர்களின் மாவட்டம் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் எடுத்துத்தான் அமைச்சர்களைத் தெரிவுசெய்ய முடியும்.

“விசாரணை நிறைவு பெறாத போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சர்களை விசாரணை செய்யும் புதிய விசாரணைக்குழு விரைவில் நியமிக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .